Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 530 ஜிகாவாட்டாக உயரும்

2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 530 ஜிகாவாட்டாக உயரும்

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் ஆண்டுதோறும் 50 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 530 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. இதில், சூரிய மின்சாரத்தின் பங்களிப்பு மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தை தொடர்பாக சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் நடப்பாண்டின் 4-வது காலாண்டில் 300 ஜிகாவாட்டைக் கடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த திறன் ஏறக்குறைய 4 மடங்கு அதிகரித்துள்ளது.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறன் 350 ஜிகாவாட்டைத் தாண்டும் என்றும், காற்றாலை மின் உற்பத்தித் திறன் 90 ஜிகாவாட்டை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதிய நீர்மின் திட்டங்கள் மற்றும் நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்களுக்கான முதலீடுகள் அதிகரிப்பதால், நீர்மின் உற்பத்தித் திறன் 75 ஜிகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் ஆண்டுதோறும் 50 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. 2025-ம் ஆண்டில் இந்த அதிகரிப்பு 49 ஜிகாவாட்டாக இருந்தது. வளர்ச்சி மேலும் வேகமெடுத்தால், 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 70 ஜிகாவாட் அளவுக்கு புதிய உற்பத்தித் திறன் சேர்க்கப்படலாம்.

2030 க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மொத்த மினசாரத்தில் பாதிக்கும் அதிகமான பங்களிப்பை சூரிய மின்சாரம் வழங்கும். இதன் மின் உற்பத்தி 2025-ஐ ஒப்பிடுகையில் 2030-ல் மூன்று மடங்காக உயரும். காற்றாலை மின் உற்பத்தியும் சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறைகள், அரசின் ஆதரவான கொள்கைகள், தொழில்நுட்பச் செலவுகள் குறைந்து வருவது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. மேலும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுவதும் இத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும்.

அதே நேரத்தில், மின் கடத்தல் கட்டமைப்புகளை விரைவாக மேம்படுத்துதல், மின்சார சேமிப்பு வசதிகளை அதிகரித்தல், மின் விநியோக அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை அவசியமாகும்.

மேலும், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், மின் விநியோக நிறுவனங்களின் நிதிநிலை பாதிப்பு ஆகியவையும் முக்கிய சவால்களாக உள்ளன.இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால், 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் வேகம், மேலும் 20 சதவீதத்துக்கும் மேல் உயர வாய்ப்புள்ளது.

இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உலகின் இரண்டாவது பெரிய வளர்ச்சி சந்தையாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Chemical industry poised for strong growth
அடுத்த செய்தி
India targets 300 MT steel output by 2030, 500 MT by 2047

தொடர்புடைய செய்திகள்